இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்க போகும் வீடியோ வெளியானது!

0
448

இங்கிலாந்து அணியின் தற்போதைய சிறந்த ஒரு ஆல்ரவுண்டராக இருந்து வருபவர் பென் ஸ்டோக்ஸ் (27). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் நகரில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில், இரு நபர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவரை கடுமையாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. England Cricket Player Ben Stokes Attack Video Released Tamil News

இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அவரது துணைக்கேப்டன் பதவியை பறித்ததோடு, சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து அவரை ஒதுக்கி வைத்தும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நடைபெறும் ஆஷஸ் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

தற்போது மீண்டும் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. 6 நாட்கள் இந்த வழக்கு நடைபெற உள்ளதால் இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மது போதையில் தகராறு செய்யும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites