வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது

0
586
Military camps North East not removed

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். (Military camps North East not removed)

அத்துடன், தொடர்ச்சியான மீளாய்வுகள் மூலம் விடுவிக்கப்படாத மக்களிக் காணிகளை இனங்கண்டு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

இராணுவம் மேற்கொள்ளும் காலத்திற்கேற்ற மறுசீரமைப்பு பணிகளை சில குழுக்கள் வடக்கு கிழக்கில் இருந்து முகாம்களை அகற்றும் நடவடிக்கை என பிழையாக சித்தரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இராணுவத்தின் குழுக்களை ஒருங்கிணைப்பு செய்யும் நடவடிக்கைகளே இடம்பெறுவதாகவும் இந்த மறுசீரமைப்பு அனைத்து படை பிரிவிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இது இராணுவத்திற்கு மாத்திரமே புரிகின்ற விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையே சில குழுக்கள் இராணுவ குறைப்பு என்றும் முகாம்கள் அகற்றப்படுதல் என்றும் பிழையாக தகவல் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Military camps North East not removed