குழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை!

0
335
most popular children suicide Zombie Boy

சர்வதேச அளவில் பிரபல மாடலாக புகழ்பெற்ற Zombie Boy என அழைக்கப்படும் Rick Genest என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். most popular children suicide Zombie Boy

குறித்த 31 வயதான ரிக் ஜெனெஸ்ட் கனடாவைச் சேர்ந்தவர். கனடாவிலுள்ள மொன்றியல் நகரத்திலுள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டு சோம்பியின் தோற்றத்தில் மொடலிங் உலகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ரிக் ஜெனெஸ்ட், லேடி காகா போன்ற பிரபல பொப் பாடகர்களின் ஆல்பத்திலும் தோன்றியுள்ளார்.

லேடி காகா, ரிக் ஜெனெஸ்ட் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
‘ரிக் ஜெனெஸ்ட்டின் இந்த மரணம் பேரழிவை தாண்டிய வலியை உலகிற்கு கொடுத்துள்ளது. நாங்கள் இங்கு நிலவும் கலாசாரத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

மனம் சார்ந்த உளவியலை முன்னிலைப்படுத்தி வர வேண்டும். இதனை பேசக் கூடாது என்ற களங்கத்தை நாம் முற்றாக அழிக்க வேண்டும்.

நீங்கள் யாராவது கஷ்டப்படுவதாக உணர்ந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். நாம் தான் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

tags ;- most popular children suicide Zombie Boy

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்