டார்லிங் வரவுக்கு நன்றி : வரலட்சுமியை பாராட்டிய விஷால்..!

0
360
Vishal Praise Varalaxmi Sandakozhi2

லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ”சண்டக்கோழி-2” படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், ’டார்லிங் வரவுக்கு நன்றி’ என்று கூறியுள்ள விஷால் வரலட்சுமியை பாராட்டியுள்ளார்.Vishal Praise Varalaxmi Sandakozhi2

அதாவது, ”இரும்புத்திரை” படத்தை தொடர்ந்து விஷால் தற்போது ”சண்டக்கோழி-2” படத்தில் பிசியாக நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், வரலட்சுமி அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் தெரிவித்துள்ளதாவது.. :-

“சண்டக்கோழி-2 படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம். இன்றுடன் வரலட்சுமி சரத்குமாரின் காட்சிகள் முடிந்துவிட்டது. இது சிறப்பானது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் அதிரவைக்கும்படியாக வந்துள்ளன. டார்லிங்க வருவுக்கு நன்றி. நான் பார்த்த சிறந்த தொழில் தெரிந்த நடிகை. அக்டோபர் 18-க்காக காத்திருப்போம்.”

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அக்டோபர் 18-ல் ரிலீசாக இருக்கிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

சிவகார்த்திகேயனின் சீமராஜா பட டீஸர் ரிலீஸ்..!

கஜினிகாந்த் : திரை விமர்சனம்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Vishal Praise Varalaxmi Sandakozhi2