மருமகளின் கழுத்தை வெட்டி கொலை செய்த மாமனார்

0
535
40 year old woman killed

மாமனார் தனது மருமகளை கத்தியால் கழுத்தை வெட்டி கொலை செய்த சம்பவம் பஸ்ஸர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (40 year old woman killed)

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பஸ்ஸர மீரியபெத்த, வெலிபிஸ்ஸ என்ற கிராமத்தில் தனது மாமனாரும் மற்றும் மாமியாருடன் வசித்து வந்த 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான நிலூகா தமயந்தி எனத் தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்த பெண்ணின் கணவன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதனால் குறித்த பெண் தனது மாமன், மாமியாருடன் வசித்து வந்துள்ளார்.

மாமியார் மருமகளுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போதெல்லாம் இவர்களை பொலிஸார் சமாதானப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் திடீரென இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராற்றில் மருமகள் மாமியாரின் தலையை கதவில் மோதியதால் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் மாமனார் மருமகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு, திடீரென ஆத்திரமடைந்த மாமனார் கையில் கிடைத்த கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளார்.

வெட்டுக்காயத்துடன் கிழே வீழ்ந்த மருமகளை வைத்தியசாலைக்கும் அவர் எடுத்துச் செல்லவில்லை.

அன்றிரவு இவரை சந்திக்க வந்த உறவினர் ஒருவர் இதனைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் 65 வயதான மாமனாரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 40 year old woman killed