பரிஸ் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

0
392
Parez warns tourists

கோடைகால விடுமுறையின் நடுப்பகுதியில், மிக முக்கியமான சுற்றுலாத்தலமாகிய ஈஃபிள் கோபுரம் புதன்கிழமை நண்பகலுக்கு பின்னர் மூடப்பட்டது. இதனால் அங்கு வந்து காத்துநின்ற சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். Parez warns tourists

ஈஃபிள் கோபுரத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நீண்டவரிசையில் நுழைவுச் சீட்டுக்காக காத்து நிற்கும்போது இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கோபுரம் மூடப்பட்டது. இதனால் பல நாட்டினைச் சேர்ந்த பயணிகள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கு முன்னர், ஈஃபிள் கோபுரத்தில் ஏறிய பார்வையாளர்கள் வெளியேற மாத்திரமே முடிந்தது.

இந்நிலையில் புதன்கிழமை மாலை SETE அமைப்பினருக்கும், தொழிற்சங்க அமைப்பான CGT அமைப்பின் அதிகாரிகளுக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை காலையும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக SETE தெரிவித்துள்ளது. நேற்று காலை 8.30 மணி அளவில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. காலை முதலே தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால், காலையில் இருந்தே ஈஃபிள் கோபுரம் பொதுமக்களுக்காக திறக்கப்படவில்லை.

இது தொடர்பாக ஊழியர்கள் தெரிவிக்கும் போது, இணையத்தளம் ஊடாக நுழைவுச் சீட்டுகள் விற்பனை அதிகரிப்பதால், ஈஃபிள் கோபுரத்தில் மிக மீண்ட வரிசையில் பார்வையாளர்கள் காத்து நிற்கின்றனர். இதனால் பணியாளர்களுக்கு ஓய்வின்றி தொடர்ச்சியாக இயந்திரம் போல உழைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முன்னர் 20 வீத நுழைவுச் சீட்டுகள் இணையத்தளம் ஊடாக விற்பனையாகியிருந்தது. ஆனால் தற்போது 50 வீத சீட்டுகள் இணையத்தளமூடாக விற்பனையாகின்றது. இதனால் அனைத்து பயணிகளும் கையில் நுழைவுச் சீட்டுகளுடன் வரிசையில் காத்திருக்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று காலையும் சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும், கோடை விடுமுறையில் ஈஃபிள் கோபுரம் மூடப்படுவதை கண்டித்து பலர் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் இட்டு வருகின்றனர்.

tags :- Parez warns tourists

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்