ஜெர்மனியில் புலிகளின் முன்னாள் உறுப்பினர் போர் குற்றச்சாட்டில் கைது!

0
582

ஜேர்மனியின் Duesseldorf பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. German Former LTTE Arrested Involves Murder Tamil News

கைது செய்யப்பட்ட சிறிலங்கா அரச படையினரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை இவர் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தார்.

அதேவேளை 2008ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 16 சிறிலங்கா படையினரை கட்டி வைத்து, அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கு பாதுகாப்பு அளித்தார் என்றும், கைதிகளாக இருந்த படையினர் கொல்லப்படும் இடத்தில் இருந்தார் என்றும் சிவதீபன் மீது ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் நேற்று, நீதிக்கான சமஷ்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இதன்போது, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தும் வாய்ப்பு இருப்பதன் அடிப்படையில் – ஜெர்மனியின் தனியுரிமை சட்டத்தின் கீழ், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites