மெர்ஸ் எனப்படும் உயிர்க் கொல்லி வைரஸ் சவுதியின் மெக்காவில் இருந்து பரவலாம் என்ற எச்சரிக்கையை அடுத்து இங்கிலாந்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாகி வருகின்றன. MERS virus spread Saudi tamil news
மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்திய மெர்ஸ் எனப்படும் வைரஸ் கடந்த 2012ம் ஆண்டு மெக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நோய் தாக்கியவர்கள் உயிரிழப்புக்கு 30 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மாதத்தின் இறுதியில் பக்ரீத் பண்டிகை வருவதால் புனித நகரமான மெக்காவுக்கு லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம்.
இதனால் இந்த ஆண்டு மெர்ஸ் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவ முகாம்கள் அமைக்கவேண்டும் என இங்கிலாந்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.