ஜோதிகாவின் காற்றின் மொழி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

0
361
Kaatrin Mozhi release date announced

ஜோதிகா நடிப்பில் உருவாகும் “காற்றின் மொழி” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜோதிகா அவரது காட்சிகளை நடித்து முடித்து விட்டாராம்.Kaatrin Mozhi release date announced

“தும்ஹரி சூளு” படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கிறது “காற்றின் மொழி”. ஜோதிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ராதா மோகன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தை ஜோதிகாவின் பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் திகதி ரிலீஸ் செய்ய, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அனுமதி அளித்துள்ளது.

இப் படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மேலும், போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார்.

இந்நிலையில், விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

கலைஞரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

விடுமுறைக்கு சென்றது கூடவா குற்றம்..? : கொந்தளிக்கும் டாப்ஸி..!

ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

ஜுங்கா : திரை விமர்சனம்..!

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!

மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!

Tags :-Kaatrin Mozhi release date announced