பிரான்ஸில் ஓடும் ரயிலிலிருந்து குதித்த இளைஞன்!

0
365
18 year old boy jump fromm RER train 

18 வயதுடைய இளைஞன் ஒருவன் தன்னை தாக்க வந்த நபர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து வெளியே பாய்ந்துள்ளான். 18 year old boy jump fromm RER train 

இச்சம்பவம் கடந்த ஜூலை 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது என்ற போதும், இத்தகவல் நேற்றே வெளியாகியுள்ளது. RER ரயில் ஒன்று Choisy-le-Roi (Val-de-Marne) மற்றும் Austerlitz நிலையங்களுக்கு இடையே பயணித்து கொண்டிருக்கும்போது, 14 தொடக்கம் 17 வயதுடைய ஐந்து நபர்கள் குறித்த இளைஞனை தாக்கும் நோக்கோடு ரயிலில் ஏறியுள்ளனர்.

அவர்கள் தாக்குதலில் ஈடுபடும் போது, இளைஞன் ரயிலில் இருந்து வெளியே பாய்ந்துள்ளான். அப்போது ரயில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்துள்ளது.

மேலும், இளைஞனின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றபோதும், இன்னமும் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் தாக்குதல் மேற்கொண்ட ஐவரை காவற்துறையினர் கடந்த புதன்கிழமையே கைது செய்துள்ளனர்.

tags :- 18 year old boy jump fromm RER train

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்