உயிரிழந்தவர்களுக்காக உறங்காமல் டொராண்டோ மக்கள் செய்யும் செயல்!

0
342
Toronto without losing their lives dead People Avenue 

கனடா டொராண்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நூற்றுக்கணக்கானோர் கூடி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இவர்கள், உயிரிழந்தவர்களுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) வரை உறங்காமல் கண்விழித்து பிரார்த்தனை செய்யவுள்ளனர். Toronto without losing their lives dead People Avenue

துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற Danforth Avenue பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு முன்பாக நேற்று, நூற்றுக்கணக்கானோர் திரண்டு இந்த அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு Danforth Avenue பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 18 வயதான யுவதி ஒருவரும் 10 வயதான சிறுமி ஒருவரும் உயிரிழந்தனர். அத்தோடு, 13 பேர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

29 வயதான பைஸல் ஹூசைன் என்பவரே இத்துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல்தாரி, பொலிஸாரை நோக்கி சுட முற்பட்ட போது அவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பைஸல் ஹூசைன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதனால் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தார் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இத்தாக்குதலுக்கு நேற்று இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையென கனேடிய பொலிஸார் கூறியுள்ளனர்.

tags :- Toronto without losing their lives dead People Avenue

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்