நான் நினைத்தால் எந்த நேரத்திலும் முதல்வர் ஆவேன்: ஹேமமாலினியின் ஆவேச பேச்சு

0
465
think I'll CM time: Hema Malini's rhetoric

நான் நினைத்தால் எந்த நேரத்திலும் முதல்வர் ஆவேன் என மதுரா தொகுதி எம்.பியும், பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி பேசியுள்ளார்.(think I’ll CM time: Hema Malini’s rhetoric,india tamilnews)

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி எம்.பியாக பதவி வகித்து வருபவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி. இவர் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாராவில் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சிலர் ஹேமமாலினியிடம் கேள்விகள் கேட்டனர். அதில் ஒன்று, உத்தரப்பிரதேச முதல்வராக விருப்பமா? என்றனர்.

அதற்கு பதிலளித்த ஹேமமாலினி, எம்.பி ஆவதற்கு முன்னரே பா.ஜ.க.வின் கட்சி பணிகளால் ஈடுபட்டுள்ளேன். நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை  அது என் சுதந்திரத்திற்கு முடிவாக அமைந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி பெண்கள் மற்றும்  ஏழைகளுக்காக பிரதமர் மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார்.  அவரை போல ஒரு பிரதமர் அமைவது கடினம். மற்ற கட்சிகளின் தலைவர்கள் எது வேண்டுமானலும் கூறலாம். ஆனால் நாட்டிற்காக யார் அதிகம் பணியாற்றிருகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என்று ஹேமமாலினி கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :