ஒன்ராறியோ மாகாண அகதிகளுக்கு ஒட்டாவாவில் இருப்பிடம்!

0
256
Ontario refugee residence issue

ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்கால இருப்பிடம் போன்ற பல வசதிகளை செய்ய ஒட்டாவாவிடம் உதவி கேட்டுள்ளது ஒன்ராறியோ அரசு. Ontario refugee residence issue 

அதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுத் தருமாறு ஒட்டாவாவிடம் ஒன்ராறியோ அரசாங்கம் கேட்டுள்ளது.

இதற்காக ஒன்ராறியோ குழந்தைகள், சமூக மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் லிசா மக்லியோட், ஒட்டாவா அமைச்சர் ஜீன் யூவ்ஸ் டக்ளஸிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சமூக உதவி செலவுகளுக்கு 90 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாகவும், ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர் செலவும் தாம் எதிர்கொள்வதாகவும் லிசா மக்லியோட் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 18 மாதங்களில் 36000 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒன்ராறியோ மாகாணத்தில் தஞ்சம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- Ontario refugee residence issue

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்