ரொறன்ரோ பகுதியில் பல உயிர்களை கொன்ற முஸ்லீம் நபர்!

0
302
Muslim man killed many lives Toronto area

கனடா – ரொறன்ரோ பகுதியில் கடந்த ஞாயிறுக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.  Muslim man killed many lives Toronto area

29 வயதான ஃபைசல் ஹூசைன் என்பவரே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என ஒன்ராரியோ விசேட விசாரணை பிரிவினர் கூறியுள்ளனர்.

ஞாயிறுக்கிழமை இரவு நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 14 பேர் காயமடைந்ததோடு, அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இந்நிலையில், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் சந்தேகநபர் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஃபைசல் ஹூசைன் நீண்ட காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வந்ததாகவும், அவரை குணப்படுத்த முடியவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தமது மகனின் செயலை நினைத்து கவலையடைவதாகவும், உயிரிழந்தவர்கள் தொடர்பில் இரங்கல் தெரிவிப்பதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால், இன்று பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அதன்பின்னர் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்ற விடயம் கண்டறியப்படுமென்றும் கூறியுள்ளனர்.

tags :-  Muslim man killed many lives Toronto area

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்