விநாயகரின் கோபத்துக்கும்- சாபத்துக்கும் ஆளாகினார் டக்ளஸ் – நடந்தது என்ன ?

0
707

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விநாயக பெருமானின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உட்பட்டு காணப்படுகின்றார் என்று காரைதீவு பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய தலைவர் இ. தங்கராசா தெரிவித்தார்.(douglas devananda ganesha )

இவரின் காரைதீவு இல்லத்தில் இந்து அன்பர்களை இன்று சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

எமது ஆலய நிர்வாகம் 2013 ஆம் ஆண்டு அப்போது பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவை எமது ஆலயத்துக்கு வரவழைத்து மகத்தான வரவேற்பு வழங்கி கௌரவித்தது.

அவருக்கு வாழ்த்து பா கையளித்து, தலை பாகை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, ஈழத்து மக்கள் திலகம் என்று பட்டம் வழங்கி கௌரவித்தோம். ஊர் மக்கள் இவ்வைபவத்துக்கு திரண்டு வந்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் அமைச்சரின் கூட்டங்களுக்கு அவ்வளவு சன கூட்டம் வந்ததே இல்லை.

டக்ளஸ் தேவானந்தாவின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. இதனால் எமது ஆலயத்தின் புனருத்தாரண வேலைகளுக்கு ரொக்க நிதி வழங்குவார் என்று அவ்வைபவத்தில் வைத்து அவராகவே பகிரங்க வாக்குறுதி வழங்கினார். அவருடைய உத்தியோகபூர்வ இணைய தளத்திலும், தேசிய பத்திரிகைகளிலும் இது சம்பந்தப்பட்ட செய்திகள் வெளியாகின.

இவர் வாக்குறுதி வழங்கியபடி எமது ஆலயத்துக்கு ரொக்க நிதி வழங்குவார் என்று நம்பி இருந்தோம். இவரிடம் இருந்து நிதியைப் பெற பகீரத முயற்சிகள் மேற்கொண்டோம். ஆயினும் இலவு காத்த கிளியாக ஏமாந்து விட்டோம்.

அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா நினைத்து இருந்தால் 10 ஆயிரம் ரூபா பணமாவது தந்திருக்கலாம். ஆயினும் அவரிடம் இருந்து ஒரு சதம் கூட எமக்கு கிடைக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொடியப்பு பியசேன சுமார் 40 இலட்சம் ரூபா ரொக்க நிதியை எமது ஆலயத்தின் புனருத்தாரண வேலைகளுக்கு வழங்கியதை நன்றி அறிதலுடன் நினைவு கூருகின்றோம்.

டக்ளஸ் தேவானந்தா வாக்களித்தபடி நடந்து கொள்ள தவறியதால் விநாயக பெருமானின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உட்பட்டு காணப்படுகின்றார் என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கின்றேன். இன்னமும் எமது ஆலயத்தின் புனருத்தாரண வேலைகள் நிதி போதாத காரணத்தால் பூர்த்தியாக்கப்படாமல் உள்ளன. அவர் பிழையை திருத்தி கொள்வார் என்கிற நம்பிக்கையும், விசுவாசமும் எமக்கு இன்றும் உள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:douglas devananda ganesha ,douglas devananda ganesha ,douglas devananda ganesha ,