பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்

0
1944
norway women statement Danushka Gunathilaka

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலகவுடன் தான் விரும்பியே ஹோட்டலில் தங்கியதாக நோர்வே நாட்டு பெண் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பெண்கள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தனுஷ்கவின் நண்பர் ஒருவர் கைதுசெய்யபட்டார்.

கைதுசெய்யப்பட்ட, பிரித்தானிய குடியுரிமை பெற்றவரும், தனுஷ்கவின் நண்பருமான, சந்தீப் ஜூட் செல்லையா என்ற நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து வெளிநாட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துடன் தனுஷ்க குணதிலகவும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பிலான விசாரணை நேற்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தனுஷ்க குணதிலகவுடன் தான் விரும்பியே ஹோட்டலில் தங்கியதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நோர்வே பெண் தெரிவித்துள்ளார்.

எனினும் தனுஷ்கவின் நண்பர் சந்தீப் வேறுவொரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தீப் அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனுஷ்க குணதிலகவை அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்றைய தினம் (23) அறிவித்திருந்தது.

நடத்தை விதி மீறல் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குணதிலகவின் போட்டிக் கட்டணமும் நிறுத்தி வைக்கப்படுவதோடு, இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் நிறைவடைந்த நிலையில் மேலதிக இடைநீக்கம் அமுலுக்கு வருகிறது.

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, “இலங்கை கிரிக்கெட்டால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணையில், அணி முகாமையாளர் அந்த வீரர் நடத்தை விதியை மீறியதாக முறையிட்டதை அடுத்தே இடைநிறுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:norway women statement Danushka Gunathilaka,norway women statement Danushka Gunathilaka,norway women statement Danushka Gunathilaka,