நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு

0
359
fourty thousand house northern province ranil wickramasinghe
(tamil news premiere ranil opening paddy store kilinochi)

நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட  கிளிநொச்சி தானியக் களுஞ்சியசாலை நேற்றைய தினம் (21) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமான திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட விவசாயிகளின்  முன்னேற்றம் கருத்தி அமைக்கப்பட்ட இக் களஞ்சியசாலையில்  நெல்லை களஞ்சியப்படுத்திய விவசாயிகள் மூவருக்கும் அதற்கான சிட்டையையும் பிரதமர் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர் பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கில் அபிவிருத்திகள் மிகவும் குறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு என பிரதமர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தில் நாம் இன்று ஒரு சிறந்த ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருகின்றோம்.

வடக்கு யுத்தத்தால் பல பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துவிட்டன.

மக்கள் மரணித்தார்கள், குடும்பங்கள் சீர்குலைந்தன, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தன.

இப்போது யுத்தம் நிறைவு பெற்றிருக்கிறது, சமாதானம் இருக்கிறது.

அப்படி இருந்தாலும் இங்கே இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதில் ஒன்றுதான் பொருளாதாரம், சமாதானம் ஏற்பட்டிருந்தாலும் அபிவிருத்திகள் குறைவாகவே உள்ளன.

நாட்டின் ஏனைய இடங்களை விட வடக்கில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு கடந்த முறை இங்கு வருகைதந்ததன் நோக்கம் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு அவதானத்தை செலுத்துவதற்காகதான்.

அத்தோடு பெண்களின் பிரச்சினைகள் கைதிகளின் பிரச்சினைகள் என்பனவும் உண்டு அதைப் பற்றி பின்னர் பேசுகிறேன். மேலும் இங்கே விவசாயிகளிடம் நிறைய பிரச்சினைகள் உள்ளன.

அவர்கள் அதிக கடன்களை பெற்றிருக்கின்றார்கள், எனவே இந்த களஞ்சியசாலை மூலம் விவசாயிகளிடத்தில் ஒரு மாற்றம் ஏற்படவிருக்கிறது.

நல்ல நிலை கிடைக்கும் வரைக்கும் களஞ்சியப்படுத்தி வைத்திருக்க முடியும், களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் காலத்தில் இதனை வைத்து கடன்களை பெற்றுக்கொள்ள முடியும்

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மூலம் இந்த பிரதேசங்களில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளன இதன் மூலம் இந்தப் பிரதேசங்களின் ஓப்பந்தகாரர்களுக்கும் வேலைகள் கிடைக்கவுள்ளன.

கொழும்பில் இருக்கின்ற பெரிய முதலாளிகளுக்காக அல்ல. எனவே இப்படியான வேலைத்திட்டத்தின் மூலம் பிரதேச மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும் இந்த செயற்றிட்டத்தின் மூலம் இந்த பிரதேசங்களில் உள்ள குளங்களையும் புனரமைக்கவுள்ளோம் இதன் மூலம் விவசாய நடவடிக்கைகள் மேம்பட்டு விவசாயிகள் நன்மையடைவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.

(tamil news premiere ranil opening paddy store kilinochi)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites