முன்னாள் போராளியின் வாழ்வாதார பசுவை கோரமாக இறைச்சியாக்கிய கயவர்கள்!

0
682

கிளிநொச்சி ஜெயந்திநகரில் கற்பமான நிலையில் இருந்த பசு ஒன்றை இனம்தெரியாத நபர்கள் இரவோடு இரவாக திருடிச்சென்று இறைச்சியாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kilinochchi Jayanthinagar Ex Militant Cow Killed

ஜெயந்திநகரில் வசித்து வரும் மூன்று மாவீரர்களின் சகோதரியும், காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியின் மனைவியும் முன்னாள் போராளியுமான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுவே இவ்வாறு கொடூரமாக இறைச்சிக்காக கொலை செய்யப்பட்டுள்ளது.


மிகவும் வறுமை கோட்டிற்குள் வாழ்ந்து வரும் இவருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இப் பசுவை வாழ்வாதார உதவியாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கொடூர செயலை செய்தவர்களை கண்டு பிடித்து தக்க தண்டனை வழங்கவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு பிரதேசத்தில் இவ்வாறு பசுக்கள் திருடப்பட்டு இறைச்சிக்காக கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites