ஜனாதிபதியை பதவி நீக்க சதி திட்டமா? சுமந்திரனும் உடந்தையாம்!

0
533
Pakistan take peaceful country president maithripala said Lankan news

எம்.ஏ.சுமந்திரனும் ஜயம்பதி விக்கிரமரத்னவும் யாருக்கும் தெரிவிக்காமல் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்கள் குழுவின் வரைபினை தயாரித்துள்ளனர் என்று சுதந்திரக்கட்சியின் சுயாதீன அணியினரும் பொது எதிரணியினரும் சபையில் குற்றம் சாட்டியுள்ளனர். New Political Draft Planning Remove Maithri President Position

அத்துடன் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான ஏற்பாடுகளையும் வரைபில் இவர்கள் உள்ளடக்கியுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை சுதந்­திரக் கட்­சியின் 16 பேர் கொண்ட சுயா­தீன அணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர ஒழுங்கு பிரச்சனை ஒன்றை முன்வைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இதன்­போது தயா­சிறி ஜய­சே­கர எம்.பி குறிப்­பி­டு­கையில்,

நிபுணர் குழுவில் பத்து பேர் உள்­ளனர். அதில் ஆறு பேர் கைச்­சாத்­திட்­டுள்­ளனர். நான்கு பேர் கைச்­சாத்­தி­ட­வில்லை. இதன்­படி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ சுமந்­திரன், ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன, சுரேன் பெர்னாண்டோ ஆகி­யோரே இந்த வரைபை தயா­ரித்­துள்­ளனர். இந்த வரைபில் என்­று­மில்­லாத வகையில் ஜனா­தி­ப­தியை பத­வியில் இருந்து நீக்­கு­வ­தற்கு பிர­தமர், எதிர்க்­கட்சி தலைவர் மற்றும் சபா­நா­யகர் ஆகி­யோ­ருக்கு அதி­காரம் வழங்­கி­யுள்­ளனர்.

இது ஜனா­தி­ப­தியை நீக்கும் சதி திட்­ட­மாகும். அதற்­கான ஏற்­பா­டு­களை வரைபில் உள்­ள­டக்­கி­யுள்­ளனர். இதனை ஏற்­று­க்கொள்ள முடி­யாது என கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, நான் ஒருபோதும் ஜனாதிபதியை பதவி நீக்கும் வகையில் செயற்படமாட்டேன். அதற்கான நோக்கம் எனக்கு இல்லை. அரசியலமைப்பு தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்த விவகாரம் தொடர்பில் தான் அவதானம் செலுத்துகின்றேன் என்று சுட்டிக்காட்டினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites