தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

0
409
Legal action taken Srireddy sensational claims,Legal action taken Srireddy sensational,Legal action taken Srireddy,Legal action taken,Legal action

தெலுங்கு பட உலகில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் பட உலகினர் மீது குற்றம் சாட்டி வருகிறார்.Legal action taken Srireddy sensational claims

அந்த வகையில், நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி ஆகியோர் இச் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு நடிகர் நானி தன்மீது பாலியல் புகார் கூறியதற்காக ஸ்ரீரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து, தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டிக்கு நடிக்க தடை விதித்து பிறகு அதை வாபஸ் பெற்றுவிட்டது.

ஆனாலும் தெலுங்கு பட உலகினர் அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யாமல் ஒதுக்குகிறார்கள். ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார்கள் இப்போது தமிழ் பட உலகினருக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. விஷாலிடம் இருந்து மிரட்டல்கள் வருகின்றன என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறும்போது.. :-

”நடிகை ஸ்ரீரெட்டி ஆதாரமின்றி குற்றம் சாட்டி வருகிறார். ஆதாரம் இல்லாமல் கூறும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஸ்ரீரெட்டி மீது நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சில உறுப்பினர்கள் அவர் மீது புகார் அளிக்க தயாராகி வருவதாகவும், அதை வைத்து ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கம் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனாதை குழந்தைகள் : கண்ணீர் விட்டழுத பாலாஜி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Legal action taken Srireddy sensational claims