சிவப்பு யானைகளின் செயல் வெட்கப்பட வேண்டியுள்ளது – அமெரிக்காவுக்கு துணைபோனவர்கள் சுயகொள்கை பற்றி பேசுகின்றனர் – விமல்

0
494
tamil news wimal weerawansa accused red elephants support ranil

(tamil news wimal weerawansa accused red elephants support ranil)

அமெரிக்காவின் கைப்பாவையாகவும் அவர்களின் தேவைக்கேற்க ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த துணை போன சிவப்பு யானைகள் இன்று சுய கொள்கை பற்றி பேசுவது வெட்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சீன நிறுவனமொன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியதாக தெரிவித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கம் மீது மூன்று ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கம் ஒரே குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றது. இந்த நகர்வுகளின் போது சிவப்பு யானைக்குட்டிகளும் உள்ளன.

அத்துடன், இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு சர்வதேச தலையீடுகள் இருந்துள்ளன.

இந்த ஆட்சி மாற்றத்தில் நேரடியாக சர்வதேச தலையீடுகளும் பல கோடிக் கணக்கான நிதியும் செலவிடப்பட்டுள்ளது.

அந்த செயற்பாடுகள் தொடர்பாக இந்த அரசாங்கம் ஏன் வாய் திறக்காது இருக்கின்றது.

ஜனாதிபதியின் புதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரது பொருளாதார நகர்வுகளில் ஊழல் நிறைந்துள்ளது.

முதலில் அங்கிருந்து விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து பழைய கதைகளை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.

அமெரிக்காவுக்கு தேவையான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு துணை போன சிவப்பு யானைகள் இன்று சுய கொள்கை பற்றி பேசுவது வெட்க்கப்படும் படியாகவுள்ளது.

நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை முழுமையாக மாற்றி நாட்டின் பாரிய வேலைத்திட்டங்கள் அனைத்தினையும் சர்வதேசத்துக்கு விற்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க தயாராகியுள்ளது.

மூன்று ஆண்டு காலமாக அரசாங்கத்தின் நகர்வுக்கு அச்சம் கொள்ளாத நாம் இன்னும் குறுகிய கால ஆட்சியில் துள்ளும் துள்ளல்களுக்கு அஞ்சப்போவதில்லை.

நல்லாட்சி, தூய்மையான ஆட்சியாளர்கள் என்றால் மத்திய வங்கி ஊழலுடன் தொடர்புபட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக வெளிபடுத்த வேண்டும்.

ஓரிருவரை மட்டுமே பலிகொடுத்துவிட்டு தப்பிக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். உண்மையான குற்றவாளிகளை வெளிபடுத்துங்கள்.

சிவப்பு யானைக்குட்டிகள் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்து உண்மைகளை வெளிபடுத்த வேண்டும் என்று விமல் வீரவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

(tamil news wimal weerawansa accused red elephants support ranil)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites