டிலான் பெரேராவுக்கு மூலை கோளாறு – முடிந்தால் அவர் அங்கொடையில் சிகிச்சை பெற வேண்டும் – திகாம்பரம் தெரிவிப்பு

0
561
tamil news dilan perera must go angoda thigambaram hot speech

(tamil news dilan perera must go angoda thigambaram hot speech)

தோட்ட தொழிலாளர்களுக்காக செய்துக் கொள்ளப்பட்ட கடந்த கால கூட்டு ஒப்பந்தத்தை அமைச்சர் பழனி திகாம்பரம் காட்டிக் கொடுத்தார் என்று கூட்டணி அமைத்து குறை கூறும் முன்னால் அமைச்சர் டிலான் பெரேராவுக்கு பெருந் தோட்டத்தை பற்றி என்ன தெரியும் என்று அமைச்சர் பழனி திகாம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மேலும் உரையாற்றுகையில், முன்னால் அமைச்சர் டிலான் பெரேராவுக்கு மூலையில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இவர் அங்கொடை மனநோயாளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் எனவ அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஊடாக நிர்மாணிக்கப்படும் வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னால் அமைச்சர் டிலான் பெரேரா தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன் செய்துக் கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை திகாம்பரம் தான் காட்டிக் கொடுத்தார் என இ.தொ.காவுடன் கூட்டணி சேர்ந்துக் கொண்டு எம்மீது சேறு பூசுகின்றனர்.

நான் ஒரு காலமும் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க போவதில்லை. காட்டிக் கொடுக்க மாட்டேன்.

இம்முறை ஆயிரம் ரூபாய்க்கு மேலதிகமாக சம்பளத்தை பெற்றுக் கொடுப்பவர்கள் என்றால் அவர்களை மாலை இட்டு வரவேற்கும் அதேவேளை இம்முறையும் தொழிலாளர்களை காட்டிக் கொடுப்பார்கள் என்றால் தொழிலாளர் தேசிய சங்கம் அதன் அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி போராடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னால் அமைச்சர் டிலான் பெரேரா ஒரு காட்டிக் கொடுத்தவர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் இருந்த போது மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக்கொடுத்தவர் மஹிந்தவிடம் இருக்கும் பொழுது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையையும் காட்டிக் கொடுத்தார்.

அதேபோன்று மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்துக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுக்கும் இவர் எவர் எவரையோ 2020 இல் பிரதமராக்குவோம் என பறைசாற்றி வருகிறார்.

ஆனால், 2020 இல் முன்னால் அமைச்சர் என்ற பதவியை கூட இழப்பார் என்று ரோகித்த அபேவர்தன அமைச்சர் சொல்லுவதை போல் இவர் தேசிய பட்டியல் ஆசனத்தையும் இழப்பார்.

ஆனால் 2020 இல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் பிரதமராகவே தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.

கடந்த கால கூட்டு ஒப்பந்தத்தின் போது 1000 ரூபாவை சம்பளமாக வாங்கி தருவதாக தம்பட்டம் அடித்தவர்கள் கடைசியில் காட்டிக்கொடுத்து விட்டு முழு பொறுப்பையும் என் மீது திணித்து விட்டார்கள்.

காட்டி கொடுத்ததை யார் என்று மக்கள் நன்கு அறிவார்கள். நான் உங்களின் ஒருவன் இந்தியாவிலிருந்து பிறந்து வரவில்லை. மடக்கும்புர தோட்டத்தில் லயத்தில் பிறந்து தொழிலாளியின் பிள்ளையாக அரசியல் செய்கின்றேன். நான் தொழிலாளர்களின் கஷ்ட, நஷ்டங்கள் நன்கு அறிந்தவன் என்று அவர் குறிப்பிட்டார்.

(tamil news dilan perera must go angoda thigambaram hot speech)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites