யுத்த காலத்தில் பெரும் வீரர் – தற்போது நடுத்தெருவில் மீன்விற்கும் ஏழை குடும்பத்தலைவன்

0
515
tamil news ex army man selling fish item road nowerdays

(tamil news ex army man selling fish item road nowerdays)

யுத்தகாலத்தில் பெரும் வீரர்களாகவும், தனவந்தர்களாகவும், உதாரண புருஷர்களாகவும் சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டவர்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வாழ்வாதாரம் இன்றி வீதியில் வியாபாரம் செய்யும் அன்றாடம் காய்ச்சிகளாக மாறியுள்ளனர்.

அந்த வகையில் யுத்த காலத்தில் பெரும் யுத்த வீரராக பலராலும் போற்றப்பட்ட சாரங்க என்ற நபர் தற்போது வீதியோரம் மீன் வியாபாரியாக உலா வருகிறார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் பங்களிப்பு செய்த உயிரை பணயம் வைத்து யுத்த களத்தில் போராடிய இராணுவத்தினரில் முக்கியமானவராக சாரங்க என்பவர் கருதப்படுகிறார்.

அவர் இன்று கலேவெல மாத்தளை சந்தியில் மீன் வியாபாரியாக தனது வாழ்வாதாரத்தை கொண்டு செல்கிறார்.

2004 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சாரங்க 6 மாத காலம் ஆரம்ப பயிற்சிகளை பூஸா இராணுவ பயிற்சி கல்லூரியில் பெற்றார்.

பின்னர் 2006 ஆம் ஆண்டு 800 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் வெற்றிகரமாக இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த 138 பேரில் ஒருவராக சாரங்கவும் வெளியேறினார்.

தனது இராணுவ வாழ்க்கைப் பயணயத்தை தொப்பிகலை தாக்குதலின் போது முதன் முதலாக ஆரம்பித்தார்.

தொப்பிகலையை மீட்கும் சிங்கள படைகளின் அணியின் திறமையாக போரிட்ட இராணுவ வீரராகத் திகழ்ந்த சாரங்க அந்த தாக்குதல் நடவடிக்கைக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட 8 பேர் கொண்ட சிறப்பு கொமாண்டோ படையணியிலும் உள்வாங்கப்பட்டிருந்தார்.

சிறுவயது தொடக்கம் சுறுசுறுப்பான துடிப்பான ஆற்றலையும் கொண்டிருந்த சாரங்க இராணுவ செயற்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.

அவரது துடிப்பு மிக்க ஆற்றலும் திறமையும் இராணுவத்தில் அவர் தரப்பில் நம்பிக்கை ஏற்பட காரணியாக அமைந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போரின் உச்சகட்டமும் இறுதியுமான யுத்தம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது.

இதன்போது தன்னுயிரை துச்சமென மதித்து அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளிலும் முன்வரிசை வீரராக செயற்பட்டார்.

யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் இலங்கை இராணுவ வீரர்களை பாராட்டுவதற்கும் கௌரவிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்களில் சாரங்கவின் உருவப்படங்களே இடம்பெற்றிருந்தது.

அவரது கம்பீரமான உடல் கட்டமைப்பே இதற்கு காரணம்.

உள்நாட்டில் மாத்திரமின்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் கூட சாரங்கவின் புகைப்படங்கள் வெளிவர ஆரம்பித்தன.

அதேபோன்று, உள்நாட்டில் இராணுவ வீரர்களை வாழ்த்துவதற்காக வீதியோரங்களில் வைக்கப்பட்ட பதாதைகள் அநேகமானவற்றில் சாரங்க இடம்பிடித்திருந்தார்.

இந்த பிரசாரங்கள் காரணமாகவே சாரங்கவிற்கு வினையாகவும், இராணுவத்தின் மீது வெறுப்பையும் ஏற்பட காரணியாக அமைந்தது.

சாரங்கவின் புகைப்படங்கள் சமூகத்தில் அநேகமான பிரதேசங்களில் பிரபலமான நேரம் முதல் சாரங்கவிற்கு இராணுவ உயர் அதிகாரிகளிமிருந்து அழுத்தங்கள் அதிகரித்தன.

இவ்வாறான நிலையில் சாரங்க இராணுவ தலைமையகத்திற்கு மாற்றப்பட்டு தனக்கு பொருத்தமற்ற வேலைகளில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டார்.

இவ்வாறான நிலை மேலும் உக்கிரமடைய ஆரம்பித்ததை அடுத்து சாரங்கவிற்கு இராணுவத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது.

தான் நாட்டுக்காக தன் உயிரை துச்சமென மதித்து செயற்பட்டமைக்கு கிடைத்த சிறந்த கௌரவமென மன உளைச்சல் அடைத்த நிலையில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் தான் ஒரு முன்னாள் இராணுவ வீரன் என அடையாளப்படுத்திக் கொண்டு பல நிறுவனங்களுக்கு சென்று தொழில் தேடி சென்ற போதும் யாரும் அவருக்கு தொழில் வழங்க முன்வரவில்லை.

இந்த நிலையில் தன் சேமிப்பில் இருந்த சிறிய தொகையை கொண்டு மீன் விற்கும் வியாபாரத்தை ஆரம்பித்து தற்போது கலேவெல பிரதேசத்தில் மொத்த மீன் வியாபாரியாக செயற்பட்டு மனைவி குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.

(tamil news ex army man selling fish item road nowerdays)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites