யாழ்.குடாநாட்டில் மேலும் 522 ஏக்கர் காணிகளை இராணுவம் உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக, மூத்த இராணுவ அதிகாரி பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். Military Spokesman Says 522 Acre Land Handover Owners
கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய கருத்துகளில் இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது,
யாழ். குடாநாட்டில் இன்னமும், 3100 ஏக்கர் தனியார் காணிகள் மாத்திரம், சிறிலங்கா இராணுவத்தினரின் வசம் உள்ளதது, ஏற்கனவே, 3800 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
”தனியார் காணிகளில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு, 880 மில்லியன் ரூபாவை, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சிடம் இராணுவம் கோரியிருந்தது.
முகாம்களை இடமாற்றம் செய்வதற்காக, கோரப்பட்ட நிதியில் ஒரு பகுதி புனர்வாழ்வு அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளது.எஞ்சிய பகுதி நிதியும் விரைவில் கிடைத்து விடும்.
இதனால், கூடிய விரைவில், எஞ்சியுள்ள பெரும்பாலான காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியும்.
வலிகாமம் வடக்கில், தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சில காணிகள் இராணுவத்துக்குத் தேவைப்படுகிறது. இதில் விட்டுக்கொடுப்பு இருக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை , யாழ். மாவட்டத்தில் இன்னமும் 4000 ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் கடந்தவாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்