அலுகோசு பதவிக்கு கோத்தபாயவே சிறந்தவர்! பிரதி அமைச்சர் கேலிப்பேச்சு!

0
618

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவே சிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள அலுகோசு பதவிகளுக்கு சரியானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார். Deputy Minister Thunes Ganganatha Says Gotabaya Suits Position

நேற்று பெல்மதுளை, ரில்லேன பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் ஜனாதிபதி கதிரையில் அமர கோத்தபாய ராஜபக்ஸ அடம்பிடித்து வருவதாக தெரிவித்த துனேஸ் கங்கந்த

இலங்கையில் ஜனாதிபதியை தெரிவு செய்வது மஹிந்த ராஜபக்ஸ அல்ல எனவும் நாட்டு மக்களே தெரிவுசெய்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தாமரை மொட்டு கட்சிக்குள் பிரச்சினை எழுந்துள்ளதாக தெரிவித்த துனேஸ் கங்கந்த
ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதே அந்த பிரச்சினை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியோ ராஜபக்ஸர்களில் ஒருவரைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்போகின்றார்கள்.

ஜனாதிபதி பதவியை ஒரு பக்கம் வைத்துவிட்டு போகம்பர சிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள இரண்டு அலுகோசு பதவிகளுக்கு கோத்தபாய விண்ணப்பிக்கலாம் எனவும் பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார்

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites