இந்து சமுத்திர நெருக்கடிகள் தொடர்பில் கடற்படையை அறிவுறுத்தியுள்ள ரணில்

0
488
Ranil Wickremesinghe said efforts regulate drug trade successful

(Navy warned alert possible submarine attacks threats ranil)

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படக் கூடிய பலவிதமான நெருக்கடிகளை தவிர்ப்பதற்கான புதிய மூலோபாயங்கள் பற்றி கவனம் செலுத்துமாறு கடற்படையை அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற, பண்டாரநாயக்க சர்வதேச ராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயின்ற பட்டதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால் அதுபற்றி விசேட கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் தவிர்ப்பதற்கு இந்து சமுத்திர பிராந்திய முக்கிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

அமெரிக்கா, இந்திய பசுபிக் பிராந்தியத்திற்கென சிறந்த கருத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதனை ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கு மேலதிகமாக அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(அரச தகவல் திணைக்களம்)

(Navy warned alert possible submarine attacks threats ranil)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites