“இலங்கை இராணுவத்துக்கு தகவல் கொடுக்க கூடாது” முதலமைச்சர் விக்கி கடும் உத்தரவு!

0
617
No Information Provided Army North Chief Minister Strictly Ordered

“சிறிலங்கா இராணுவத்தினர் எந்தத் தகவலையாவது கேட்டால், எனது அனுமதியின்றி எந்த தகவலையும் வழங்கக் கூடாது” என வடக்கு மாகாண முதலமைச்சர்.சி.வி.விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். No Information Provided Army North Chief Minister Strictly Ordered

வட மாகாணசபை அதிகாரிகளுக்கு அவர் விடுத்துள்ள அறிவுறுத்தலின் படி தமது ஆலோசனையைப் பெறாமல், சிறிலங்கா இராணுவத்தினர் கேட்கும் எந்த தகவலையும் வழங்கக் கூடாது என இறுக்கமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே வடக்கு மாகாண முதலமைச்சர்.சி.வி.விக்னேஸ்வரன் இந்த உத்தரவு பற்றி கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் உரையாற்றும் போது , மத்திய அரசாங்கம், மாகாணசபை, மற்றும் ஆளுனர் நடத்தும் நிர்வாகம் என்று மூன்று வகையான நிர்வாக நடைமுறைகளால் பொதுமக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites