பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி இப்படி தான் இறந்தார்! அதிர்ச்சி ஆதார காணொளி!

0
1034

கோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், பேரிடர் மேலாண்மை பயிற்சியின்
போது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Tamil Nadu NCC Training Student Dies Shocking Video

ஆலந்துரை சேர்ந்த லோகேஸ்வரி என்ற மாணவி நரசிபுரத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ., பயின்று வந்தார்.

ஆபத்து காலத்தில் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து, கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் உயரத்தில் இருந்து கீழே குதிப்பதற்கான பயிற்சியின் போது, மாணவி லோகேஷ்வரியை, பயிற்சியாளர் ஆறுமுகம் 2ஆவது மாடியில் இருந்து கீழே குதிக்கக் கூறியுள்ளார்.

அப்போது மாணவர்கள் கைகளில் வலையை ஏந்தியபடி கீழே தயாராக நின்று கொண்டிருந்தனர். ஆனால் பயத்தில் இருந்த லோகேஷ்வரி குதிப்பதற்கு மறுத்துள்ளார்.

இதையடுத்து பயிற்சியாளர் அவரை கீழே தள்ளிவிட முதல் மாடியில் இருந்த ஜன்னலில் அடிபட்டு விழுந்த மாணவி படுகாயமடைந்தார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லோகேஸ்வரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.

Video Source : Youtube Channel The Times of India

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites