சிறைச்சாலைக்குள் விழுந்த பந்தால் ஏற்பட்ட விபரீதம்; அதிகாரிகள் அதிர்ச்சி

0
627
Heroin trafficking 33 year old woman sentenced life imprisonment

டென்னிஸ் பந்தில் 3 கிராம் ஹெரொயின் போதைப் பொருளை வைத்து, வெலிக்கடை சிறைச்சாலையினுள் வீசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (Heroin trafficking 33 year old woman sentenced life imprisonment)

அத்துடன், போதைப் பொருள் விநியோகித்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதனால் கொழும்பு, சீவலீபுர பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதான திருமணமான பெண் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கடுமையான வேலையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையினுள் இவ்வாறு வெவ்வேறு பொருட்களில் வைத்து போதை பொருட்கள் வீசப்படுவதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண்ணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி கொழும்பு சீவலீபுர பிரதேசத்தில் ஹெரேராயின் கிராம் 3.15 வைத்திருந்தார் என்றும் விநியோகம் செய்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Heroin trafficking 33 year old woman sentenced life imprisonment