பொலிஸாருக்கும் குற்றவாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது – விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

0
417
north province chief minister vickneshwaran decide several party contest

(CV Wigneswaran told police chief unable control crime)

வட மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல், பெண்கள் மீதான வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தனர்.

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளதாக தான் தெரிவித்ததாகவும் அதனை பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்கொண்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு 2 நாள் பயணமாக விஜயம் செய்திருந்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதியமைச்சர் நளின் பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்தச் சந்திப்பு கைதடியிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முதலமைச்சர், குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.

அவற்றை கட்டுப்படுத்த பொலிஸாரிடம் ஆளணிப் பற்றாக்குறை உள்ளது.

அத்துடன், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வெற்றிடம் உள்ளது என்று பொலிஸ் மா அதிபரிடம் எடுத்துக் கூறியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

(CV Wigneswaran told police chief unable control crime)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites