விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது! சர்ச்சையை கிளம்பியுள்ள முன்னாள் நீதியரசர்!

0
555
Former Chief Justice Sarath N Silva Vijayakala Statement

விஜயகலாவின் விடுதலைப்புலிகள் பற்றிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விஜயகலாவின் கருத்து அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்திருப்பின் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் வெளியாகியிருந்தன. Former Chief Justice Sarath N Silva Vijayakala Statement

இந்நிலையில், அரசியலமைப்பிற்கமைய விஜயகலாவிற்கு எதிராக வழக்கு தொடர முடியாது என முன்னாள் நீதியரசர் அறிவித்துள்ளார்.

விஜயகலாவின் கருத்து, பதவியேற்பின்போது வழங்கும் சத்தியப்பிரமாணத்திற்கு எதிரானது என்பதால் அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஜயகலாவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கும் என தான் நம்பவில்லை என்றும், அவரது இக்கருத்திற்கு பின்னால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தூண்டுதலாக இருந்திருப்பார் என சந்தேகிப்பதாகவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை