கொழும்பின் மாற்றத்தைக் கண்டு வியந்து போன தென்னாபிரிக்க வீரர்!!! : டுவிட்டரில் வைரல்…

0
418
Colombo roads Clean Dale Steyn news Tamil

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. Colombo roads Clean Dale Steyn news Tamil

இதில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான பயிற்சிப்போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், தென்னாபிரிக்க வீரர்கள் சிலர் கொழும்பின் சில பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் தென்னாபிரிக்க அணியுடன் இலங்கை வந்துள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் கொழும்பின் மாற்றம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் கருத்தொன்றை பகிர்ந்துள்ளார்.

ஸ்டெயின் கடந்த 2006ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இதன்படி தான் முதற்தடவை பார்த்த கொழும்புக்கும், தற்போது பார்க்கும் கொழும்புக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை பார்த்து பூரிப்படைந்து இந்த டுவிட்டர் பதிவை மேற்கொண்டுள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவில், “கொழும்பின் வீதிகள் குப்பைகள் இன்றி சுத்தமாக இருப்பதில் ஈர்க்கப்பட்டு விட்டேன். பாதைகள் சிறப்பாக இருக்கிறது. வாகன தரிப்பிடங்களும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளன. நான் 2006ம் ஆண்டு பார்த்த கொழும்புக்கும், இப்போது பார்க்கும் கொழும்புக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தற்போதைய கொழும்பை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது.” என பதிவிட்டுள்ளார்.

ஸ்டெயினின் பதிவுக்கு இலங்கை ரசிகர்கள் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Colombo roads Clean Dale Steyn news Tamil, Colombo roads Clean Dale Steyn news Tamil