(twitter suspends 70 million accounts two months)
சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதனால் பல்வேறு சமூக சீர்கேடுகளும், பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதை தடுக்க சமூக வலைத்தளங்கள் எந்த அக்கறையும் காட்டவில்லை என்ற புகார்கள் சமீப காலங்களாக எழுந்து வருகின்றன. இதையடுத்து பொய்யான செய்திகளை பரப்புவதை தடுக்க சமூக வலைத்தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் எழுந்தது.
இதையடுத்து போலியான, சமூக பிரச்னைகளை ஏற்படுத்தும் கருத்துக்களை தடுக்கும் வகையில், அதைப் பரப்பும் டுவிட்டர் கணக்குகளை கண்டறிந்து கடந்த மே, ஜூன் மாதங்களில் மட்டும் 70 மில்லியன் (7 கோடி) டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017ம் வருடம் அக்டோபர் மாதம் முதல் இந்த நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.