ஆவா குழுவை இல்லாதொழிக்க இரண்டு வாரங்கள் போதுமானது…!

0
173
northern province director inspector police rashan announce

ஆவா குழுவை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு இரண்டு வாரங்கள் போதுமானது என வட மாகாணத்தின் சிரேஷ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். northern province director inspector police rashan announce

யாழ். குடாநாட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் மற்றும், மக்கள் வாழ்கைக்கு ஏற்படும் அழுத்தங்கள் அதிகரிப்பு காரணமாக இந்த குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய 100 பொலிஸாரை கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று கடந்த 5ஆம் திகதியில் இருந்து யாழில் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும், விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விசேடமாக ஆவா குழுவினர் நடமாடும் பகுதிகளில்; 4 பொலிஸ் பிரிவுகள் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுக்கள், யாழ்ப்பாணம், சுன்னாகமம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆவா குழுவினர் அனைத்து செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
northern province director inspector police rashan announce

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites