மக்கள் மனங்களை வென்ற கால்பந்து அணி ஜப்பானிய அணியே….!

0
182
japan foot ball team people fair team clean ground and stadium

ரஷ்ய உலககோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியத்திடம் ஜப்பான் அணியினர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்கள், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தோல்வி அது….. japan foot ball team people fair team clean ground and stadium

போட்டி முடிந்தபின் கண்ணீர் விட்ட ஜப்பானிய வீரர்கள் அதன் பின் செய்ததுதான் இன்று தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

தோல்வியடைந்து மனம் வெறுத்த நிலையிலும் தங்கள் அறையினை சுத்தம் செய்து, கழிவறையினை தாங்களே சுத்தம் செய்து ஒப்படைத்திருக்கின்றார்கள்

எதற்கு என்றால், எந்நிலையில் அந்த அறை தங்கள் கையில் கிடைத்ததோ அதே நல்ல நிலையில் அடுத்து வருபவர்களுக்காக விட்டு செல்ல வேண்டுமாம்

இதை கேட்டு அறை நிர்வாகிகள் ‘இவர்கள் நாட்டிலா பூகம்பம் வருகின்றது, சுனாமி வருகின்றது?’ ஆனந்த கண்ணீர் வடிக்க, அடுத்ததாக ஜப்பானிய கால்பந்து அணி வீரர்கள் செய்திருப்பது மகா மற்றுமொறு அதிசயம்

அந்த கால்பந்து விளையாட்டு அரங்கையும் சுத்த படுத்தியிருக்கின்றனர், ஏன் என கேட்டால் புன்னகை பூக்க சொன்னார்கள்

‘இந்த குப்பை ஏன் வந்தது? நாங்கள் ஆடுவதை பார்க்க வந்த கூட்டத்தால் வந்தது, அவ்வகையில் நாங்களும் பொறுப்பு அல்லவா? அதனால் அதனை சுத்தபடுத்தவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது எனதெரிவித்துள்ளர்.’

ஜப்ப்பான் வீரர்கள் குப்பைகளை அகற்றும்பொழுது ஜப்பானிய ரசிகர்களும் களத்தில் இறங்கி இருகின்றார்கள்.

‘நீங்கள் எல்லாம் மனிதர்களே அல்ல, தெய்வங்கள்..’ என உலகம் ஜப்பானிய வீரர்களை கொண்டாடி கொண்டிருக்கின்றது

ஜப்பானின் இளம் தலைமுறை எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா? அப்படி சமூக பொறுப்போடும் சுய கட்டுபாட்டோடும் உருவாக்கி இருக்கின்றார்கள்

உலக கோப்பையினை யார் வெல்லப்பேகின்றனர் என தெரியவில்லை ஆனால் ஆனால் மக்கள் மனங்களை வென்ற வீரர்கள் ஜப்பானிய வீரர்கள்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
japan foot ball team people fair team clean ground and stadium

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites