வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கோர விபத்து சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி – 6 பேர் வைத்தியசாலையில்

0
116
eastern province earavur front university accident 6 wounded

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவர்; உயிரிழந்துள்ளதாக அறுவர் காயமடைந்துள்ளனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். eastern province earavur front university accident 6 wounded

இந்த சம்பவம் இன்று அதிகாலை 03.30 மணியளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்தில் 09 வயதுடைய ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த சாபித் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இச் சம்பவத்தின் போது ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களுள் ரமீஸ் என்பவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
eastern province earavur front university accident 6 wounded

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites