கோட்டாபயவின் பிரவேசம் சொந்த கட்சிக்குள்ளேயே குழப்பநிலை – ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படக் கூடாது

0
175
Gotabhaya Rajapaksa linked joint opposition Sri Lanka not presidential

(Gotabhaya Rajapaksa linked joint opposition Sri Lanka not presidential)

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைத்துக் கொண்டாலும் அவரை எந்த வகையிலும் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக் கூடாது என கூட்டு எதிர்க்கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வாசுதேவ நாணயக்கார போன்ற பழைய இடதுசாரிகள் மட்டுமல்லாது, குமார வெல்கம, டளஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் இது குறித்து கலந்துரையாடி வருவதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசகர்களாக இருக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர், இந்த அணியுடன் இணைந்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ சூழ்ந்துள்ள “வியத் மக” அமைப்பில் அங்கம் வகிக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், அரசியல் எதிரிகளை தூக்கிலிட்டு கொலை செய்ய வேண்டும் என பகிரங்கமாக கூறியுள்ள கருத்து மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்காலத்தில் சுமத்தப்படவுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

அத்துடன் வியத் மக, எளிய ஆகிய கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவான அமைப்புகள் நடத்தும் கூட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து அதற்கு பதிலாக புதிய அமைப்பு ஒன்றை உருவாக்குவது பற்றியும் பேசப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் நாட்டில் தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டியவர் குறைந்தது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டவராக இருக்க வேண்டும் எனவும் இந்த விடயத்தில் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருந்தார்.

மேற்படி கலந்துரையாடிலின் பிரதிபலனாகவே குமார வெல்கம இவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

(Gotabhaya Rajapaksa linked joint opposition Sri Lanka not presidential)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites