(india holds first rank facebook users worldwide)
உலகளவில் உள்ள சமூகவலைதள பயன்பாடு மற்றும் அதன் பயனர்களை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தலையை சுற்ற வைக்கும் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதில், குறிப்பாக உலகிலேயே Facebook பயனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. வலைதளங்களை பயன்படுத்துபவர் ஒவ்வொருவரும் Facebook உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட சமூகவலைதள கணக்குகளை வைத்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஆண்கள் பெண்கள், மாறுப்பாலினத்தவர் என்ற பாரப்பட்சம் கிடையாது. சமூகவலைதள பயன்பாட்டில் அனைவருமே அடக்கம். இந்நிலையில் உலகளவில் அதிகளவில் ஃபேஸ்புக் பயனர்களை கொண்ட நாடுகளை குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியா முதலிடம் உள்ளது.
உலகளவில் ஒவ்வொரு நொடிக்கும் 6 பேர் வீதம், ஒரு நாளைக்கு சாராசரியாக 5 லட்சம் பேர் Facebook ல் புதிய கணக்கை துவங்குகிறார்கள். இதில் ஏற்கனவே கணக்கு வைத்திருப்போர், புதிய கணக்கு தொடங்குவோர் அனைவரும் அடக்கம்.
இப்படியே சென்றால், ஒரு தனிமனிதனின் முழுமையான வாழ்நாளில் 5-க்கும் மேற்பட்ட ஆண்டுகளை ஒருவர் Facebook வலைதளத்தில் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். வரும் காலங்களில் இந்த காலவரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
india holds first rank facebook users worldwide