காணி வழங்குவதாக கூறி ஏமாற்றிய தோட்ட நிர்வாகம் : அதிருப்தியில் மக்கள்!

0
435
kandy hanthana estate news Tamil today

கண்டி ஹந்தானை 3ம் கட்டை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்குவதாக கூறி, ஏமாற்றியதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். kandy hanthana estate news Tamil today

கடந்த வராம் தோட்டத்தில் காடுகளாக இருந்த இடங்களை துப்பரவு செய்யமாறு தோட்ட முகாமைத்துவம் அறிவித்துள்ளது. குறித்த இடத்தில் காணி வழங்கவுள்ளதாக அறிவித்தே தோட்ட நிர்வாகம் துப்பரவு செய்யுமாறு கோரியுள்ளது.

தங்களுக்கு காணி வழங்குவதாக நினைத்து, குறித்த இடங்களை துப்பரவு பணியில் ஈடுபட்ட மக்கள், அதனை நிறைவுசெய்து காத்திருந்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி (ஜுலை) காணி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் மேடை அமைத்து காத்திருக்க, சில அரச அதிகாரிகள் குறித்த இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளாகவும் காணி உரிமம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. இப்படி எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் குறித்த விடயம் தொடர்பில் தோட்ட முகாமை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது குறிப்பிட்ட தோட்ட முகாமை குறித்த தோட்டம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இங்கு வீடுகள் அமைக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனை கேட்ட மக்கள் தற்போது தமிழ் அமைச்சர் ஒருவரின் வருகைக்காக காத்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

kandy hanthana estate news Tamil today, kandy hanthana estate news Tamil today, kandy hanthana estate news Tamil today