ஒட்டுமொத்த பங்களாதேஷ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி : டெஸ்ட் போட்டியில் குறைந்த ஓட்டங்கள்!

0
539
West indies vs Bangladesh 2018 news Tamil

மே.தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 43 ஓட்டங்களுக்கு சுருண்டு, தங்களது குறைந்த டெஸ்ட் ஓட்டத்தை நேற்று பதிவுசெய்துள்ளது. West indies vs Bangladesh 2018 news Tamil

இரண்டு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்பூடாவில் உள்ள நோர்த் சவுண்ட் ஆண்டிகாவில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வெற்றிபெற்ற மே.தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மே.தீவுகளின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெறும் 43 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.

பங்களாதேஷ் அணிசார்பில் லிடன் டாஸ் 25 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இதில் முஷ்தபிகூர் ரஹீம், அணித்தலைவர் சகிப் அல் ஹசன், மொஹமதுல்லா மற்றும் கம்ருல் இஸ்லாம் ரப்பி ஆகியோர் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தனர்.

மே.தீவுகள் சார்பில் அபாரமாக பந்து வீசிய கீமா ரோச் 5 ஓவர்கள் பந்து வீசி 8 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கட்டுகளையும், ஹோல்டர் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்ட இந்த ஓட்ட எண்ணிக்கையானது, அந்த அணி டெஸ்ட் போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2007ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதுவே அந்த அணியின் குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையாக இருந்த நிலையில், நேற்றைய தினம் 43 ஓட்டங்களுக்கு சுருண்டு அதிர்ச்சியளித்துள்ளது.

ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1955ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக, நியூஸிலாந்த அணி பெற்ற 26 ஓட்டங்களே இதுவரையில் குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

West indies vs Bangladesh 2018 news Tamil,West indies vs Bangladesh 2018 news Tamil,West indies vs Bangladesh 2018 news Tamil