அலோசியஸின் சிறைச்சாலை மெத்தையின் அடியில் என்ன இருந்தது தெரியுமா?

0
261

 

பிணை முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன தலைவரான அர்ஜீன் அலோசியஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து 3 கைப்பேசிகள் மற்றும் 5 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Perputal Treasuries Arjun Jail

ஒரு கைப்பேசி அர்ஜீன் அலோசியஸின் மெத்தையின் அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கைப்பேசிகள் மற்றும் சிம் அட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.

இதேவேளை அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.