இலங்கை கிரிக்கெட் வாரிய அணி அறிவிப்பு

0
298
Sri Lanka board xi vs South Africa news Tamil

(Sri Lanka board xi vs South Africa news Tamil)

தென்னாபிரிக்க அணிக்கெதிராக எதிர்வரும் 7ம், 8ம் திகதிகளில் கொழும்பு சாரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் வாரிய அணியின் தலைவராக, இலங்கை தேசிய அணியின் தலைவர் (ஒருநநாள் மற்றும் T-20) எஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இலங்கை அணியுடன் மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு T-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜுலை 12 தொடக்கம் 16ம் திகதிவரை நடைபெறவுள்ளது. குறித்த போட்டிக்காகா காலி செல்லவுள்ள தென்னாபிரிக்க அணி அதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் வாரிய அணியுடன் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடவுள்ளது.

இந்த போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் வாரிய அணிக்குழாத்தின் விபரத்தை இன்று கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தின் தலைவராக மே.தீவுகள் தொடரிலிருந்து பாதியில் நாடு திரும்பிய எஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் மே.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இலங்கை அணி 1-1 என போட்டியை சமப்படுத்தியிருந்தது. இந்த தொடருக்காக மே.தீவுகள் சென்றிருந்த எஞ்சலோ மெத்தியூஸ், அவரது மனைவி குழந்தை பிரசுவிக்கவிருந்த காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடி விட்டு நாடு திரும்பினார்.

மே.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் 11 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 31 ஓட்டங்களையும் மெத்தியூஸ் பெற்றுக்கொடு்த்திருந்தார். இவர் தொடர்ந்து தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பையும் இழந்து வருகின்றார். 2017ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்த மெத்தியூஸ், இவ்வருடத்தின் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரமே விளையாடியுள்ளார்.

இவ்வாறான காரணத்தால் தனது துடுப்பாட்ட பலத்தை இழந்து வரும் மெத்தியூஸ் இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளி்ல் கலந்துக்கொண்டதுடன், அவ்வப்போது பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடி வந்தார். தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான முன் ஆயத்தமாக, மெத்தியூஸ் இந்த பயிற்சிப் போட்டியிலும் விளையாடவுள்ளார்.

இதேவேளை, மெத்தியூஸ் உடன் இலங்கை தேசிய அணியின் சில வீரர்களும் இந்த அணிக்குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். மே.தீவுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிய தனுஷ்க குணதிலக மற்றும் ரொஷேன் சில்வா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மே.தீவுகள் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌசல் சில்வா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமாரா ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் மினோட் பானுக, அவிஸ்க பெர்னாண்டோ, லசித் அம்புல்தெனிய பினுர பெர்னாண்டோ, கசுன் மதுசங்க, விமுக்தி பெரேரா, அஷித பெர்னாண்டோ ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக வீரர்கள்

அஷேன் பண்டார

விகும் சஞ்சய

வனிது ஹசரங்க

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Sri Lanka board xi vs South Africa news Tamil, Sri Lanka board xi vs South Africa news Tamil, Sri Lanka board xi vs South Africa news Tamil