நல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்!

0
520

விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று நேற்று யாழ்ப்பாணத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தினால், சிறிலங்கா அரசியலில் இன்று கொந்தளிப்பான நிலை தோன்றியிருக்கிறது. Vijayakala Maheswaran Controversial Speech Truth Behind Issue

நேற்று நாடாளுமன்றம் கூடிய போது, விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், கூட்டு எதிரணி உறுப்பினர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பினார்கள்.

ஆளும்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர். இதனால் ஏற்பட்ட குழப்ப நிலையால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

அதேவேளை, விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து சட்டத்துக்கு முரணானதாக இருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் வடக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சமூக விரோதச்செயல்களை கண்டு அதிருப்தி அடைந்தவராக , முன்பு விடுதலைப்புலிகளின் காலத்தை நினைவூட்டி உணர்ச்சி பெருக்கில் கருத்து கூறிய விஜயகலா மகேஸ்வரனை கூட்டு சேர்ந்து தாக்கும் சிங்கள பேரினவாத தரப்புக்கு மிகவும் செருக்குடன் இனவாத கருத்துக்களை வாரியிறைத்த பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா போன்றவர்கள் புனிதமானவர்களாக தெரிகின்றார்களா?

பொதுவெளியில்ன் கோயிலை உடைத்தேன்,நீதிபதியை மாற்றினேன் ,ஆயுதங்களை வழங்கி ஆயுதக்குழுக்களை அடாவடிகளில் ஈடுபடுத்தினேன் என மக்கள் விரோத,நீதிவிரோத, தேசவிரோதப் பேச்சுக்களைப் பேசிய ஹிஸ்புல்லாவுக்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத இந்த அரசு விஜயகலா விடயத்தில் மிகவும் தீவிரமாக நடந்துகொள்வது நல்லாட்சி அரசின் பின்னடைவுகளை ஓரம்கட்டும் நடவடிக்கையாவே நோக்கவேண்டியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்துகொண்டு எத்தனையோ அயோக்கியத்தனங்களைப் புரிபவர்கள் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் முகங்கொடுக்காமல் பகல் கொள்ளையர்களாக வாழும்போது வார்த்தைகளால்த் தவறிழைத்த விஜயகலா அவர்களைத் தண்டிக்க முழு நாடும் முண்டியடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
இந்த நேரத்தில் விஜயகலா அவர்களை ஆதரித்து நிற்கவேண்டிய தமிழினம் இனவாதிகளோடு இணைந்து நின்று நையாண்டி செய்வது சுத்த அயோக்கியத்தனம்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்துச் சிங்கள அரசியல்வாதிகளும் ஏனையவர்களும் இந்த விடயத்தில் அளவுக்கதிகமாக ஒப்பாரி வைப்பது தனித்த இனவாத சிந்தனையேயன்றி வேறில்லை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites