இலங்கை தமிழ் இளைஞனுக்கு கனடாவில் நேர்ந்த சோகம்!

0
417

கனடாவின் ஸ்கார்போர்வில், ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞனின் சடலம் சுமார் 1 மாதத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. DJ BrownSoul

இசைக்கலைஞரான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற 27 வயது இளைஞனின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டி.ஜே. பிறவுன்சோல், என அழைக்கப்படும் பார்த்தீபன் சுப்ரமணியம், தனது நண்பர்களுடன் சென்றிருந்த வேளையிலேயே காணாமல் போயிருந்தார்.

சுப்ரமணியம் தனது 10 வயதில் இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளார்.
அவர் தனது உறவினரான தீபன் என்பவருடம் கனடாவில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்டாரியோ ஏரியில் படகுப் பயணம் சென்றிருந்தவேளையில் காணாமல் போயிருந்தார்.

தற்போது அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விபரத்தை காவல்துறையினர் குடும்பத்தினரிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இவரது இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜுலை 8 அன்று நடைபெறவுள்ளது.