இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
239

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 20ம் தேதி, ஷவ்வால் 19ம் தேதி,
4.7.18 புதன்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி இரவு 8:43 வரை;
அதன் பின் சப்தமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் இரவு 2:37 வரை;
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
பொது : முருகன் வழிபாடு, விவேகானந்தர் நினைவுநாள்.

.

மேஷம்:

திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர்.

 

ரிஷபம்:

அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

மிதுனம்:

மனதில் உற்சாகம் மிகுந்திருக்கும். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி மறையும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்ல வாய்ப்புண்டு.

கடகம்:

சிலர் உங்களிடம் உதவி கேட்டு அணுகுவர். தொழில், வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

சிம்மம்:

பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாட நேரிடலாம். உடல்நலனில் கவனம் தேவை. உறவினரால் உதவி உண்டு.

கன்னி:

குடும்பத்தினர் பெருமைப்படும் விதத்தில் செயல்படுவீர்கள். நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு பெருகும். ஆரோக்கியம் பலம் பெறும்.

துலாம்:

நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் படிப்படியாக உயரும். பெண்கள் சிக்கனம் மூலம் சேமிக்க முயல்வர். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.

விருச்சிகம்:

செயல்களில் எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர்.

தனுசு:

மனக்குழப்பம் உண்டாகி மறையும். தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை செலுத்தவும்.

மகரம்:

லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

கும்பம்:

மற்றவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். தொழில், வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பெண்களுக்கு நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி  நடத்த திட்டமிடுவீர்கள்…

மீனம்:

மாறுபட்ட கருத்து கொண்டவர்களிடம் விலகுவது நல்லது. பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராகத் திகழ்வர்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்