தமிழீழ புலிகளின் முன்னாள் போராளி தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது

0
289
tamilnews sinamkol tamil Eelam kolkatta international film award

(tamilnews sinamkol tamil Eelam kolkatta international film award)

“சினங்கொள்” என்ற ஈழம் சார்ந்த திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது.

பூ திரைப்படத்தில் இயக்குனர் சசியுடன் உதவி இயக்குனராக பணி புரிந்த ரஞ்சித் ஜோசேப் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் வசனங்களையும் பாடல்களையும் ஈழத்தை சேர்ந்த கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் புகழ் என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதியுடன் இலங்கை கதாபாரத்தில் நடித்த அரவிந்த் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக மற்றும் புதுமுகநாயகி நர்வினி டெரி நடித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரின் வாழ்க்கை மற்றும் நிகழ்கால ஈழம் குறித்த இந்தப் படத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் சிங்கள கலைஞர்களுடன் தமிழகம், இந்திய கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர்.

(tamilnews sinamkol tamil Eelam kolkatta international film award)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites