பழனி கோவிலில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

0
456
tamilnews tamilnadu fire accident pazhani temple office

(tamilnews tamilnadu fire accident pazhani temple office)

பழனி முருகன் கோவிலின் நிர்வாக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பழனி கோவில் மூலவர் சன்னதியில் உள்ள பழமை வாய்ந்த நவபாஷாண சிலைக்கு பதிலாக புதிய சிலை அமைக்க கடந்த 2004 ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு சிலை வடிவமைக்கப்பட்டது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சில மாதங்களிலேயே நிறம் மாறிப்போனதால் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த முறைகேடு விசாரணையில் ஸ்தபதி முத்தையா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் பழனி முருகன் கோவில் தொடர்ந்து செய்திகளில் கருப்பொருளாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் பழனி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமை அலுவலகத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பல முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

காற்று சீராக்கியில் (ஏ.சி) ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாக தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(tamilnews tamilnadu fire accident pazhani temple office)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites