நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் – முதல்வர் உறுதி

0
97
5 crore Chief Ministers public relief fund indiatmilnews tamilnews

18 pilgrims traveled Nepal brought safe places plane

நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்ற தமிழர்கள் 18 பேர் விமானம் மூலமாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று முதல்வர் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின், நேபாளத்தில் புனித யாத்திரையில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 300-க்கும் மேற்பட்ட தமிழர்களும் சிக்கித் தவித்து வருகின்றனர்.

மாநில அமைச்சர் அல்லது உயர் அதிகாரி ஒருவரை டெல்லிக்கு அனுப்பி மத்திய அரசுடன் தொடர்புகொண்டு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உடலை தமிழகம் கொண்டு வர உடனடி நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்ற சென்னையை சேர்ந்த 18 பேர் விமானம் மூலமாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் சிலர் இன்று இரவு சென்னை திரும்ப வாய்ப்புள்ளது.

மேலும், நேபாளத்தில் உயிரிழந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரனின் உடல் தற்போது காட்மன்டுவில் உள்ள மருத்துவமனையில் உள்ளது. அவர்களது உறவினர்கள் அங்கு விரைந்துள்ளனர். உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தமிழகத்திற்கு ஓரிரு நாளில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

18 pilgrims traveled Nepal brought safe places plane

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :