சுவிஸை வெளியேற்றி காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது ஸ்வீடன்…!

0
195
Sweden chance play quarter finals beating Switzerland football

(Sweden chance play quarter finals beating Switzerland football)

ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் சுவீடன் காலிறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சுவிட்சர்லாந்துடன் மோதிய சுவீடன் 1-0 என சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் கால்பந்து உலகக் கோப்பையின் இன்றைய நாக் அவுட் போட்டியில் ஸ்வீடனும், சுவிட்சர்லாந்து அணியும் வினையாடின.

பரபரப்பாக நடந்து முடிந்த போட்டியில் ஸ்வீடன் சுவிட்சர்லாந்தை 1 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

அர்ஜென்டினாவை வென்று பிரான்ஸ், போர்ச்சுகலை வென்று உருகுவே, ஸ்பெயினை வென்று ரஷ்யா, டென்மார்க்கை வென்று குரேஷியா, மெக்சிகோவை வென்று பிரேசில், ஜப்பானை வென்று பெல்ஜியம் ஆகியவை ஏற்கெனவே காலிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்வீடன் சுவிட்சர்லாந்தை வெற்றிகொண்டுள்ளது.

ஆட்டத்தின் முதல் பாதி கோல் அடிக்கப்படாமலே முடிந்தது. அடுத்ததாக ஆட்டம் தொடங்கிய 66- வது நிமிடத்தில் போர்ஸ்பர்க் கோலடிக்க ஸ்வீடன் 1 – 0 என்று முன்னிலை பெற்றது.

அதன் பிறகு சுவிட்சர்லாந்து வீரர்கள் எவ்வளவோ முயன்றும் கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் பரிதாபமாகத் தோற்று வெளியேறியிருக்கிறது.

கொலம்பியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெரும் அணியுடன் ஸ்வீடன் சனிக்கிழமை அன்று காலிறுதியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் மூலம் – தமிழ் மைக்கேல்

(Sweden chance play quarter finals beating Switzerland football)
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :