அம்பாறையில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

0
142
students food poison

அம்பாறை அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பகுதியிலுள்ள மாணவர்கள் சிலர் உட்கொண்ட இனிப்புப் பண்டம் விசமாகியுள்ளது.(students food poison)

இதன்போது, சுகயீனமுற்ற 7 மாணவர்கள் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 மாணவர்களும் 2 மாணவிகளும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆலையடிவேம்பு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புப் பண்டம் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றை உட்கொண்ட சில மாணவர்கள் வாந்தி, வயிறுவலி போன்ற குணங்குறிகளுடன் சுகயீனமடைந்துள்ளனர்.​

அவர்கள் உட்கொண்ட இனிப்புப் பண்டம் காலாவதியாகியுள்ளமை பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:students food poison,students food poison,students food poison,